ஹாஸ்டலில் உணவருந்தி கொண்டிருந்த 5 மாணவர்கள் பலி

 

அஹமதாபாத் விமானம் பிஜே மருத்துவ கல்லூரியின் மீது வெடித்து சிதறியதில் ஹாஸ்டலில் உணவருந்தி கொண்டிருந்த மாணவர்கள் 5 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.


MAY DAY CALL ! | Thandora Tamilan

 

ஒரு விமானி "மேடே" (Mayday) என்று அழைத்தால், அது விமானம் மிகக் கடுமையான மற்றும் உடனடி ஆபத்தில் உள்ளது, உடனடியாக உதவி தேவை என்று அர்த்தம். இது விமானப் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சர்வதேச அவசரகால சிக்னலாகும்.

இந்தியாவை உலுக்கிய துயரம்!

 


அலகாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்த நிலையில் இருப்பதாக வீடியோக்கள் வெளியாகி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.

இந்த விபத்தில் இதுவரை 170 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது

கோவில் விழாவில் சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி,மயக்கம்



 விருதுநகர் அருகே கல்விமடை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் உணவருந்தியவர்களில் 80 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சற்றுமுன் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வெடிவிபத்து

 


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தனியார்  பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இன்று காலையில் வேலைக்கு வந்தவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது பட்டாசில் உராய்வுகள் ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு கட்டடம் முழுவதும் தரை மட்டமானது இதில் வேலைபார்த்து கொண்டிருந்த  3 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

ராப் பாடகர் அமீர் ஹொசைன் ததாலூ- க்கு மரணதண்டனை

 



ஈரானிய பாப் மற்றும் ராப் பாடகர் அமீர் ஹொசைன் ததாலூ (Amir Hossein Tataloo) என்பவருக்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முகமது நபியை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மே 2025 இல் ஈரானிய உச்ச நீதிமன்றம் இந்த மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது. அவர் 2023 டிசம்பரில் துருக்கியில் இருந்து ஈரானுக்கு நாடு கடத்தப்பட்டு, அப்போதிருந்து தடுப்பு காவலில் உள்ளார். விபச்சாரத்தை ஊக்குவித்தல் மற்றும் ஆட்சிக்கெதிராக பிரச்சாரம் செய்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார். இந்த தண்டனைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.