ராப் பாடகர் அமீர் ஹொசைன் ததாலூ- க்கு மரணதண்டனை

 



ஈரானிய பாப் மற்றும் ராப் பாடகர் அமீர் ஹொசைன் ததாலூ (Amir Hossein Tataloo) என்பவருக்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முகமது நபியை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மே 2025 இல் ஈரானிய உச்ச நீதிமன்றம் இந்த மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது. அவர் 2023 டிசம்பரில் துருக்கியில் இருந்து ஈரானுக்கு நாடு கடத்தப்பட்டு, அப்போதிருந்து தடுப்பு காவலில் உள்ளார். விபச்சாரத்தை ஊக்குவித்தல் மற்றும் ஆட்சிக்கெதிராக பிரச்சாரம் செய்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார். இந்த தண்டனைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.


No comments:

Post a Comment